Naan Ramaseshan Vanthirukkiren [I, Ramaseshan Have Come]
Failed to add items
Add to basket failed.
Add to wishlist failed.
Remove from wishlist failed.
Adding to library failed
Follow podcast failed
Unfollow podcast failed
Buy Now for £2.99
No valid payment method on file.
We are sorry. We are not allowed to sell this product with the selected payment method
-
Narrated by:
-
Indira Soundarajan
About this listen
கலைமகள் மாத இதழில் நான் தொடராக எழுதிய தொடர் கதைதான் இந்த ‘நான் ராமசேஷன் வந்திருக்கேன்' என்னும் புதினம்.
‘ஆகாயம் காணாத நட்சத்திரம்’ என்று ஒரு தொடரில் ஐம்பது வயதைக் கடந்து விட்ட மீனாட்சி என்கிற ஒரு முதிர் பெண்ணை நாயகியாக வைத்து நாவல் செய்தேன். நல்ல வெற்றியையும் பாராட்டையும் அது பெற்றுத் தந்தது.
அதைத் தொடர்ந்து அதே போல முதுமையைத் தொட்டுவிட்ட ஒரு ஆண் பாத்திரமான ராமசேஷன் என்பவரை வைத்துச் செய்ததுதான் இந்தப் புதினமும்....
ஒரு நாவலில் கதா பாத்திரங்கள் இளையவர்களாக இருக்க வேண்டும். அழகானவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும் என்பது திரைப்படங்களின் நிலைப்பாடு.
கிட்டத்தட்ட தொடர் கதைகளிலும் அது தான் நிலை. விதிவிலக்காய்ச் சில தொடர்கள் உண்டு. அந்த வகையைச் சேர்ந்தது இந்த நாவல்.
நான் மிக அனுபவித்து எழுதிய தொடர்களில் இதுவும் ஒன்று. நிச்சயம் இதை வாசிப்பவர்களுக்கு நல்ல மன நிறைவும் நெகிழ்வும் ஏற்படுவது உறுதி.
இத்தனைக்கும் எனது கதையின் நாயகனான ராமசேஷன் ஒரு வயோதிகப் பிராம்மணர் மனைவியை இழந்தவர். ஒரே மகள் தான் அவருக்கு... அவளுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டு அவளது அரவணைப்பில் வாழ வழியில்லாமல் தனிமையில் அவர் படும்பாடும் அதை உடைக்க அவர் மகள் செய்யும் யத்தனங்களும் தான் இத்தொடரின் பிரதான அம்சம்.
Please note: This audiobook is in Tamil.
©1996 Indira Soundarajan (P)2011 Pustaka Digital Media Pvt. Ltd., India